வடமேற்கு ஒன்ராறியோவிலுள்ள புறநகர் பகுதியான பிகாங்ஜிகம் ஃபெஸ்ட் நேஷனில் 20 முழுநேர மனநல சுகாதார ஊழியர்களை நியமிப்பதற்கென ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
குறித்த பகுதி மக்கள் தற்கொலை நெருக்கடிகள் மற்றும் மனநல சுகாதார தேவைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இந்நிலையில், அம்மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதார அதிகாரிகள் ஒன்ராறியோ மற்றும் மனிடோபா எல்லைப் பகுதியில் இருந்து பணியில் ஈடுபடுவர் என்றும் இதற்கென ஆரம்பகட்டமாக 1.6 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அவரச ஆலோசனைகள் மற்றும் பரந்த மனநல ஆரோக்கிய சேவைகள் வழங்கப்படுதல் அத்தியவசியமாகும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.