கடந்த 4 ஆண்டுகளாக உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்துக்கொண்டவர் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.
தற்போது, அவரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கவிருக்கிறார் அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பீஸோஸ்.
போர்ப்ஸ் இதழ் இதனை கணித்துள்ளது. அதுவும் அடுத்த 3 வாரங்களில் இது நிகழ இருப்பதாகவும் கூறுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பீஸோஸ் தான் அடுத்த 3 வாரங்களில் நம்பர்-1 உலக கோடீஸ்வரர் அரியனையில் அமரப்போகிறார்.
உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள் அளித்து வரும் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தான் இந்த ஜெஃப் பீஸோஸ்.
தற்போது உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறார்.
பங்குச்சந்தைகளில் அமேசான் நிறுவன பங்குகள் நாள்தோறும் விண்னை முட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் அமேசான் பங்கு மதிப்பு 1.3% அதிகரித்தது, இதன் மூலம் நேற்று (24.7.17) ஒரு நாளில் மட்டும் 1.1 பில்லியன் டொலர்கள் இவரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இவரின், மொத்த சொத்து மதிப்பு 88.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
ஜெஃப் பீஸோஸ் உலகின் முதல் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை பெற அவருடைய சொத்து மதிப்பில் மேலும் 2 பில்லியன் டொலர்கள் அதிகரித்தால் போதும், பங்குசந்தை நிலவரங்களின் அடிப்படையில் அடுத்த 3 வாரங்களில் மைக்ரோசொப்ட் தலைவர் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி உலகின் முதல் கோடீஸ்வரராக ஜெஃப் பீஸோஸ் மாறுவார் என போர்ப்ஸ் இதழ் கணித்துள்ளது.
பில்கேட்ஸின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 90.1 பில்லியன் டொலர் ஆகும்.