ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.அப்துல் கலாம் நினைவு மண்டபம் அவருடைய வாழ்வின் பாதையை நினைவூட்டுதாக அமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய நினைவாக இராமேஸ்வரத்தில் நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, அப்துல் கலாம் இந்தியாவின் அக்னியாக திகழ்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ‘ அப்துல் கலாம் ஒருசிறந்த விஞ்ஞானி மாத்திரமல்ல. சிறந்த மனுதரும் கூட. இராமேஸ்வரத்தில் ஆரம்பித்த அவருடைய பயணம் டெல்லி வரை சென்றுள்ளது. அவருடைய வாழ்வும் செயலும் பலருக்கு ஊக்கமூட்டுவதாகவே அமைந்துள்ளது. எளிமையாக தனது வாழ்கையினை ஆரம்பித்த அப்துல் கலாம் உயரங்கள் பலவற்றை தொட்டவர்.அவர் மறைந்தாலும் அவருடைய கருத்துக்கள் மூலம் எம்மோடு வாழ்ந்து வருகின்றார்’ என்று தெரிவித்துள்ளார்.