மக்கள் ஆணைக்கு மாறாக ஆட்சியை கவிழ்க்க துடிக்கும் கூட்டு எதிரணியின் முயற்சிக்கு ஒரு போதும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறித்தல் தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம் பெற்றது.
இந்த விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன நாட்டின் ஜனநாயகம் மரணபடுக்கையில் இருக்கும் போது எதிர்க் கட்சித் தலைவர் மெளனமாக இருந்து வருவதாக குற்றம் சுமத்தினார்.
இதற்குப், பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய சம்பந்தன் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.