சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஒருவர் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் தாக்கப்பட்டு காயமடைந்தார்.
கொடிகாமம் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளரான எஸ் சிந்துராஜ் என்பவர் மீதே அடையாளர் தெரியாத நால்வர் தாக்குதல் நடத்தினர்.
பணியை முடித்து உந்துருளியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வரணிக்கும் துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 6.45 மணியளவில் – இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
முகத்தை மூடியிருந்த நால்வரே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த உதவி ஆய்வாளர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.