கண்டி வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் 7ம் தரத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற 13 வயது மாணவன் சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இம் முச்சக்கரவண்டி எரிபொருள் ஏதுமின்றி சூரிய சக்தியிலிருந்து இயங்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகம எல்லை அலுவலகத்தில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.
இவரது கண்டுபிடிப்பை அப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்..