கறுப்பு யூலையின் நினைவேந்தல் நிகழ்வு யாழ் முற்றவெளியினில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபி முன்றலில் இன்று மாலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் இயக்கத்தினரால் இன்று அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையினில் நூற்றுக்கணக்கனில் திரண்டிருந்த இளம் சமூகத்தினரால் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் இளையோர் இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் அரசியல் கட்சிகளது தலைவர்கள், பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்தவர்களென பலரும் பங்கெடுத்திருந்தினர்.
முல்லை நில ஆக்கிரமிப்பு, முதலமைச்சரிற்கெதிரான அரசியல் சூழ்சியென பல மட்டத்திலும் போராட்டங்களை முன்னெடுப்பதினில் தமிழ் இளையோர் இயக்கத்தினர் பங்குபற்றிவருவது குறிப்பிடத்தக்கது.