ரொறொன்ரோ நகரின் டவுன் ரவுன் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் தொடர்ச்சியாக 17 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும், இதில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மூன்று உயிரிழப்பு சம்பவங்களும் ஹெரோயின் கலந்த வென்ரநில் என்ற மாத்திரையினாலேயே ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகையால் ஹெரோயின் கலந்த வென்ரநில் மாத்திரை போன்ற ஆபத்தான பொருட்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு பூங்கா மற்றும் பொது இடங்களில் இத்தகைய ஆபத்தான பொருட்களை கண்டால் உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.