காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த 162 ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமைச்சர் மனோ கணேசன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மேற்படி கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.