பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வில்லியம்ஸ் லேக் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடிய தீயணைப்பு வீரர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நன்றி தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை பிரதமர் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.
மேலும், காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உறுதி வழங்கினார்.
காட்டுத்தீயினால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெரிபூ பிராந்தியம் மற்றும் வில்லியம்ஸ் லேக் நகர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.