பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிக வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் டொப்ஸ்ஃபீல்ட் தீயணைப்பு வீரர் ஜொனதன் ஹலினான் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை நாசமாக்கியுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் முயற்சியின் ஒரு அங்கமாகவே இவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
வனவியல் மற்றும் தீயணைப்பு திணைக்களத்தின் இரண்டு வார ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் கனடாவில் பணியாற்றவுள்ளார். இதன்போது, தீயை கட்டுப்படுத்தல், முக்கிய கட்டமைப்புகளை பாதுகாத்தல் போன்ற பணிகளில் இவர்கள் முக்கிய கவனம் செலுத்தவுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் நூறிற்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத் தீ, தீவிரமடைந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.