இத்தாலியில் உள்ள இஸ்சியா தீவில் நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கடற்கரை நகரமான நேபில்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையே வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந் தன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியானார். 25 பேர் காயம் அடைந்தனர். இங்கு 4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நில நடுக்கத்தில் இஸ்சியா தீவின் புராதன கிறிஸ்தவ தேவாலயம் உள்பட பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கேசமிக்சி போலா நகரில் பெரும்பாலான கட்டிடங்கள் அடியோடு இடிந்து நாசமாயின. மீட்பு பணி நடைபெற்று வருகிறது.