வீதியால் சென்ற தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்காபுறோ (Scarborough) நகர் பகுதியில் இரவு 8 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த பெண் வந்திருந்த நிலையில் வீதியால் சென்ற ஒருவர் குறித்த பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுக்க முயன்றுள்ளார்.
எனினும் குறித்த பெண் தனது சங்கிலியை கையால் இறுக்கப் பற்றிய நிலையில் அப்பெண்ணை வீதியில் தள்ளி விழுத்தி விட்டு திருடன் தப்பி சென்றுள்ளார்.
குறித்த பெண் கீழே விழுந்ததை அவதானித்த பொது மக்கள் தப்பி ஓடிய திருடனை பிடிப்பதற்காக பின்தொடா்ந்தனா். இந்நிலையில் இந்த சம்பவம் தொடா்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாக திருடன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





