அமைச்சுப் பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாபதியால் இது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.