தமிழ்நாடு வேலூர் சிறையில் 6ஆவது நாளாக உணவைத் தவிர்த்து தியானத்தில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
காலை, மதியம், இரவு என்று 3 வேளைகளிலும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முருகனின் அறைக்கு முன்பு 24 மணி நேரம் சிறைக்காவலர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்படுகிறார் என்றும், முருகன் உடல் சோர்வடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 26ஆண்டுகளுக்ளுக்கும் மேலாக இருந்து வரும் முருகன் சிறைச்சாலையிலேயே ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 18ஆம் நாள் முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சிறைத்துறை அதிகாரிகள் முருகனிடம் ஜீவசமாதி அடையும் முடிவை கைவிட்டு, உணவு அருந்தும்படி கூறியுள்ள போதிலும், அதனை முருகன் ஏற்க மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.