விடுதலைப் புலிகளுடனான மூன்று பத்தாண்டு கால போர் அனுபவங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஆரம்பமான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘அழிவுகரமான வன்முறைகள் நாட்டின் மீண்டும் துளிர்ப்பதைத் தடுப்பதிலும், பிராந்திய மற்றும் ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் சிறிலங்கா இராணுவம் கரிசனை கொண்டுள்ளது.
பிராந்திய மற்றும் ஆசியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு உறவுகளில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் தீவிரமான பாத்திரத்தை வகிப்பதற்கும், பாதுகாப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கும் சிறிலங்கா இராணுவம் முயற்சிக்கிறது.
வன்முறைகள் இப்போது சவாலானதொரு பிரச்சினையாகும். உலகில் நீங்கள் வாழும் பகுதி எது என்பது முக்கியமில்லை. துரதிஷ்டவசமான தீவிரவாதத்தினால் தூண்டப்பட்ட வன்முறை உலகளவில் போய்விட்டது
ஒவ்வொரு மனிதனும் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.