முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்த தனது மகனை கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்த முன்னாள் போராளி வீமனின் (ஜனாா்த்தனன்) தாயார் ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்தார். முன்னாள் போராளி வீமன் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போய் எட்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அவரது தாயார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தொடர்ச்சியாக போராடி வந்தார்.
இந்நிலையில் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமலே கடந்த 31-08 2017 அன்று அமரத்துவம் அடைந்து விட்டார். இவரின் இறுதிக் கிரியைகள் எட்டு மாவட்டத்தையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் கிளிநொச்சி மக்களும் சூழ பூதவுடல் கிளிநொச்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.