இன்று ஒட்டாவாவில், கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான மூன்றாகம் கட்ட பேச்சுக்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
NAFTA உடன்பாடு முதன்முதலில் 23 ஆண்டுகளின் முன்னர் கையெழுத்தான நிலையில், அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட சக்திவளத்துறை குறித்த விடயத்தினை மெக்சிக்கோ நிராகரித்திருந்தது.
மெக்சிக்கோவின் கனிய எண்ணெய்த் தொழில்துறை முற்றுமுழுதாக அந்த நாட்டின் அரசாங்கத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டுவந்த நிலையில், அந்த நாட்டு அரசாங்கத்தால் இவ்வாறான நிராகரிப்பு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்த நாட்டின் சனாதிபதியாக வந்த என்றிக்கோ, 2013ஆம் ஆண்டில் மெக்சிக்கோவின் எண்ணெய் வளச் சந்தையை அனைத்துலக முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட முடிவு செய்தார்.
அதன் பலனாக தற்போது மெக்சிக்கோ NAFTA உடன்படிக்கையின் சக்திவளத் துறை விவகாரத்திலும் முழுமையான பங்காளியாக முடியும் என்ற நிலையில், இன்று ஒட்டாவாவில் ஆரம்பமாகவுள்ள பேச்சுக்களின் விளைவாக மெக்சிக்கோ குறித்த அந்த விடயத்தினையும் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.