8 நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு அந்த நாட்டு அதிபர் டொனால் டிரம்ப் அறிவித்த பயணத் தடைக்கு மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.
ஈரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா, சாட், வடகொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெனிசுவேலாவில் இருந்து வரும் குறிப்பிட்ட சில தனி நபர்கள் ஆகியோரை குறிவைத்து அதிபர் டிரம்ப் அந்த தடையை பிறப்பித்திருந்தார்.
அமெரிக்க அதிபரின் அந்த பயணத் தடை உத்தரவு இன்று புதன்கிழமை முதல் நடப்பிற்கு வரவிருந்த நிலையில் அத்றகு அந்த நாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முந்தைய தடை உத்தரவில் இருந்த அதே தவறுகள் புதிய உத்தரவிலும் இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அதிபர் டிரம்பின் இந்த உத்தரவு நடப்பிற்கு வருவதற்கு தாற்காலிகத் தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆறு முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகளைக் குறிவைத்து கடந்த மார்ச் மாதம் அதிபர் டிரம்ப் பிறப்பித்த இதே போன்ற ஒரு பயணத் தடை உத்தரவுக்கும் இதே நீதிபதி தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.