தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டிய நாள் இன்றாகும்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில் கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப் படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில், 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் நாள் இந்த வீர காவியம் எழுதப்பட்டது.
விடுதலைப் புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்று வர்ணிக்கப்பட்ட, வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து சிறீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி, சிறீலங்காப் படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்கள் இன்று நினைவு கூரப்படுகின்றனர்.
தமிழீழத்தின் எல்லைப் பகுதிகள் ஊடாக கரடுமுரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை ஈழத் தமிழினம் இன்று பத்தாவது ஆண்டில் நினைவு கூர்கிறது.