• Home
  • About Us
  • Add News
  • Contact Us
Sunday, April 26, 2026
  • Login
Canadian Tamil Radio - ctr24.com
Live Radio Advertisement
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • பிறந்தநாள் வாழ்த்து
    • திருமண வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு
No Result
View All Result
Canadian Tamil Radio - ctr24.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல்

வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.

dineshpress by dineshpress
November 3, 2017
in அரசியல், இலங்கை, உலகம், சிறப்புச் செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருக்கின்ற போதிலும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது இலங்கை அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும் என்பதனை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மை நிலை குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்கள் தனது மதிப்பீடு மற்றும் பரிந்துரைகளை அறிவித்துள்ளதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழர்களின் குரலாக அனைத்துலகம் பேச முற்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உள்ளடக்கியதான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுக்களின் போதும், சந்திப்புக்களின் போதும், இவ்விடயங்களையே வலியுறுத்த்திக் கூறிவந்திருந்தனர் எனவும், அத்துடன் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் தமிழர் தரப்பில் இருந்தும் இவ்வாறான கருத்துக்களே வலியுறுத்தப்பட்டு வந்திருந்தது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

தமது பிராந்திய உலக வல்லாதிக்க நலன்களை முன்னிறுத்தி கண்மூடித்தனமாக செயற்பட்டிருந்த அனைத்துலகம், உண்மைகளை மூடிமறைத்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது எனவும், நீதி நியாயம் பேசும் அனைத்துலகம் தமிழர்கள் விடயத்தில் இழைத்த மாபெரும் தவறாக இவ்விடயம் அமைந்துள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

காலம் கடந்த நிலையில் இன்று ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாடானது வெறுமனே வார்த்தைகளுக்குள் முடங்கிவிடாது செயலுருப்பெற வேண்டுமாயின் வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் என்பதனை இந்த நேரத்தில் வலியுறுத்திக் கூறக்கடமைப்பட்டுள்ளதாகவும் ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.

அனைத்துலகத்தின் மீது தமிழர்கள் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணரின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதோடு, தமிழர் தாயகத்தில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் தமிழின அiழிப்பு நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனைக்குள்ளாக்கவும், அதன் அடிப்படையில் தமிழர்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றவும், அனைத்துலக சமூகம் உறுதியாக செயற்பட வேண்டுமென உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாகவும் அது தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் ஏமாற்று நாடகங்களை இனியும் நம்பி காலத்தை வீணடிப்பதானது அனைத்துலகமும் தவறுக்கு துணைபோவதாகவே அமையும் எனவும், வெறுமனே செயலுருப்பெறாத இலங்கை அரசின் நடவடிக்கைகளை சிறந்த முன்னேற்றமாக ஏற்று அங்கீகரிப்பதானது, கடந்த காலத் தவறுகளின் நீட்சியாக அமைந்துவிடுவதுடன், தீர்விற்கான பாதையில் இருந்து இலங்கை அரசாங்கம் வெகுவாக விலத்திச் செல்லவே வழிவகுக்கும் என்பதையும் அது சுடடிக்காட்டியள்ளது.

ஆகவே இந்த நூற்றாண்டு கண்டிராத மாபெரும் இன அழிப்பினை மேற்கொண்டவர்களை காப்பாற்ற முனையும் இலங்கை அரசை தடவிக்கொடுத்து தத்தமது நலன்களை மீள்உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை பிராந்திய, உலக நாடுகள் உடனடியாக கைவிட்டு, தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது மிக மிக அவசியமாகும் எனவும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

நெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Post

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Posts

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !
உலகம்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு ஈழத்தமிழ் பெண் !

June 24, 2024
ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி
உலகம்

ரஷ்யாவில் பயங்கரம் :ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி

June 24, 2024
தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு
இலங்கை

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

June 24, 2024
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!
இலங்கை

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

June 24, 2024
காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை
உலகம்

காசா போரில் இஸ்ரேல் நிச்சயம் தோற்கும்: ஈரான் கடும்தொனியில் எச்சரிக்கை

June 24, 2024
சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
அரசியல்

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

June 24, 2024
Next Post

ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தினை துப்புரவு செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weather
Please enter your OpenWeatherMap API key.
Weather from OpenWeatherMap

About

கனேடியத் தமிழ் வானொலியின் 25 ஆண்டை கொண்டாடும் வகையில் உங்களை சந்திக்க வருகிறது Canadian Tamil radio - www.ctr24.com

Follow us

Important Links

  • வானொலி நேரலை
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • கனடா செய்திகள்
  • சினிமா செய்திகள்

Recent Posts

  • நீரிழிவினால் முடி உதிர்வு அதிகரிக்குமா June 24, 2024
  • முதியவர்களை இளைஞர்களாக மாற்றும் மருந்து கண்டுபிடிப்பு..! June 24, 2024
  • எக்ஸ் தளம் தொடர்பில் மஸ்கின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு June 24, 2024
  • ஆப்பிள் நிறுவனத்துடன் இணையும் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனம்! June 24, 2024
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

The best sites to buy Instagram followers in 2024 are easily Smmsav.com and Followersav.com. Betcasinoscript.com is Best sites Buy certified Online Casino Script. buy instagram followers buy instagram followers Online Casino

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • விளையாட்டு
    • அரசியல்
    • சினிமா
    • மருத்துவம்
    • தொழில்நுட்பம்
    • வணிக செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
  • பதிவுகள்
    • வணக்கம் கனடா
    • அரசியல் களம்
    • திண்ணை
    • காணொளிகள்
  • அறிவித்தல்கள்
    • மரண அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • நிகழ்வுகள்
    • விளம்பரங்கள்
  • வானொலி நேரலை
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்புகளுக்கு

© 2024 Copyright All Rights Reserved. ctr24.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In