அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் 20இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இவ்வாறு கைச்சாத்தியுள்ள மேலதிக வர்த்தக ஒப்பந்தங்களின் பெறுமதி சுமார் 250 பில்லியன் டொலர்க்ள என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும், சில ஒப்பந்தகள் கோரப்பட்ட தொகையினை விடவும் குறைவானவை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா அதிபர் ஜீ ஜின் பிங் உடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்நது அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக சீன துணை பிரதமர் வாங் யங் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், பொருளாதார துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆசிய நாடுகளுக்கான 12 நாள் சுற்றுப பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர், யப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
தமது இந்த சீனாப்பயணத்தை தொடர்ந்த வியட்நா செல்லவுள்ள அமெரிக்க அதிபர், அங்கு நடைபெறும் ஆசிய பொருளாதார உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
குறித்த அந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.