வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கில் வாழ்ந்து வரும் சில தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடிதம் ஊடாக தாம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும், துரதிஸ்டவசமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அண்மையில் அனைத்துலக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.