ஈரான்,ஈராக் நாடுகளின் எல்லைப் பகுதியில் 7.3 ரிக்கடர் அளவிலான வலுவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.18 மணிக்க இந்த நிலநடுக்கம் எற்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் வடகிழக்கு எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள ஹாலாப்ஜா நகருக்கு தென்மேற்கு திசையில், 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க பூகோள ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைநடுக்கத்தால் ஈரான்னில் மாத்திரம் குறைந்தது 61பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறே ஈராக் நாட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.