மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட இருவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது. இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் நடைபெற்றது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
வாள்வெட்டுக்கு இலக்காகிய இருவரும் 33, 35 வயதை உடையவர்கள். அவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்வெட்டுக் கும்பலின் அடாவடிகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. அவை
அண்மைக்காலமாக மேலும் அதிகரித்துள்ளன.





