தனியரசு உருவாக்கத்திற்கான வளர்ச்சி போக்கில் இன்னுமொரு படிக்கல் தமிழீழ காவற்துறை தமிழீழ காவற்துறையினர் தமது முதலாவது அணிவகுப்பு மரியாதையை தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கிய நாள் இன்று.
1991ம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி தமிழீழ காவல்துறைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர்.தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் 1991ம் ஆண்டு கார்த்திகை 19ம் திகதி அன்று தமிழீழ காவல்துறையின் அணிவகுப்ப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஒரு தனியரசை நிறுவப் போரிடும் ஒரு தேசிய இனமாகிய எமது விடுதலைப்போர் வரலாற்றில் பொறித்து வைக்கபட வேண்டிய நிகழ்வாக காவல்துறையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நன்றி – ரஞ்சன்