சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பல தரப்பினரும் பங்குபெறும் கூட்டம் ஒன்று நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரோஹானி, துருக்கி அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் ஆகியோருடன் பேச்சு நடத்திய பினர் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன் அவர்கள் மூவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், சிரியா அரசும் எதிர்த் தரப்பினரும் ஆக்கபூர்வமான முறையில் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அந்த கூட்டம் நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.