மாவீரர் என்றால் யாரென்று ஒவ்வொரு ஈழத்தமிழ் ஆண், பெண், சிறுவர், சிறுமிக்கும் தெரிந்த விடயம். தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்தவர்கள் மாவீரர்கள். இவர்கள் வீரத்தின் இலக்கணமாக திகழ்கின்றனர். எதிரியை அழித்தவர்கள். அஞ்சாது எதிரியின் பாசறைமேல் படையெடுத்து வெற்றி கண்டவர்கள். உலகவரலாற்றில் எமது மாவீரர்களுக்கு நிகரானவர்கள் வேறு யாருமில்லை. ஆணும் பெண்ணுமாகப் பால் வேறுபாடின்றிப் போரிட்டுச் சாதனை படைத்த மாவீரர்களைத் தமிழீழம் தவிர்ந்த பிறநாட்டில் காண்பது அரிது. கொடியது அகல, விடுதலை கிடைத்திட உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்த மாவீரர்கள் வணக்கத்துக்குரியவர்கள்