சிரியாவின் வடமேற்காக அமைந்துள்ள இட்லிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கார் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் உட்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுள் 7பேர் பொதுமக்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சிரிய அதிபருக்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகளின் தலைமையகத்தை குறிவைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அளவில் இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் இட்லிப் மாகாணம் போராளிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், அங்கு சிரிய அரசு படைகளும், ரஷ்ய படைகளும் போர் விமானங்கள் மூலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.