கடந்த மகிந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடான திட்டமொன்றை முன்கூட்டியே அறிந்துக் கொண்டதன் காரணமாகவே, சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார் என்று இலங்கையின் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டுடன் மகிந்த அரசாங்கம் மேற்கொள்ளவிருந்த முறைகேடான ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் ஊடகவியலாளர் லசந்த அறிந்திருந்தார் எனவும், அதையடுத்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் லசந்த கொலை செய்யப்பட்டதாகவும் அவர் விபரித்துள்ளார்.
அதாவது கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் நாள் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேளை, லசந்த விக்ரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.