சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அரசிதழ் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
எல்லா வகையான தேர்தல் பரப்புரைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணிக்குப் பின்னர், வீடு வீடாக பரப்புரை செய்யும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை நடைபெறும் தேர்தலுக்கு முன்னர், இடைப்பட்ட காலத்தில் வாக்குகளை கோரி எந்த விதமான பரப்புரைகளையும் நடத்த முடியாது.
வேட்பாளர்கள் தமது வீடுகள், பணியகங்களில் கூட பதாதைகளைக் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தமது வாகனங்களில் கொடிகளை பறக்க விடுவதற்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் சுவரொட்டிகளையோ பதாதைகளையோ காட்சிப்படுத்த முடியாது.
இந்த விதிமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுவோரைக் கைது செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.