ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கான தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்து்ளள, முன்னாள் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட், இந்தக் கட்சித் தலைமைத்துவப் பதவியை பெற்றுக்கொள்ளாவிட்டாலும், ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்று இதனைத் தெரிவித்துளள அவர், எதிர்வரும் யூன் மாதம் ஒன்ராறியோ மாகாண சட்டமன்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் ஏதோவொரு வகையில், பழமைவாதக் கட்சியின்கீழ் தான் போட்டியிடவுள்ளமை உறுதி என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ரொரன்ரோ நரசபை தேர்தலில் கிடைத்த வெற்றியினை, மாநில அளவிலான வெற்றியாக தன்னால் மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கான தலைமைப் பதவிக்காக மட்டுமின்றி, ஒன்ராறியோ சட்டமன்றுக்காகவும் தான் போட்டியிடப் போவது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.
கடசியின் வளர்ச்சிக்காக மட்டுமன்றி, ஒன்ராறியோ மக்களின் நலனுக்காகவே தான் கட்சித் தலைமைத் தேர்தலிலும் போட்டியிடுவதாகவும், தன்மீது எவரும் ஆதிக்கம் செலுத்தவோ, தன்னை யாரும் விலைக்கு வாங்கவே முடியாது எனவும் டக் ஃபோர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.