எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போதே சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, எந்தவகையிலும் கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது எனவும், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இந்தக் கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உருப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்