வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூயகரம் தூயநகரம் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் இன்று குருமன் காட்டு கோவில்வீதி முதலாம் ஒழுங்கை முதல் குருமன் காட்டு பிள்ளையார் கோவில் வரையான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி, விளம்பரங்களை அகற்றி சுத்தம் செய்யும் திட்டத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தாண்டிக்குளம் வேட்பாளர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.