உள்ளுர் அதிகார சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, தாம் வெற்றிபெற்ற சபைகளில் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இல்ஙகை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.