ஒன்ராறியோவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாட்டினை சமப்படுத்தும் சட்டமூலம் இன்று ஒன்ராறியோ சட்டமன்றில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமாக இருந்தால், அனைத்து கொடுப்பனவுகளிலும் முழுமையான வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டிய விதிமுறையும் நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதன்படி வேலை வெற்றிடங்களுக்காக செய்யப்படும் அனைத்து விளம்பரங்களிலும், சம்பளத் தொகையினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அது மட்டுமின்றி முன்னைய நிறுவனத்தில் ஊழியர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட இழப்பீட்டு தொகை விபரங்கள் தொடர்பில் புதிதாக வேலை வழங்குவோர் தகவல் கோருவதையும், அவ்வாறு முன்னைய இழப்பீட்டு விபங்களை வெளியிட மறுக்கும பணியாளர்களை பழிவாங்குவதையும் இந்த புதிய விதிமுறை தடை செய்வதாகவும் கூறப்படுகிறது.
ஒன்ராறியோ மாகாண அரசும் இணைந்தே இந்த விதிமுறை செயலாக்கங்களை முன்னெடுக்கவுள்ள நிலையில், இதற்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 50 மில்லியன் டொலர்கள் வரையில் செலவிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.