கனடா, மெக்சிக்கோவுடன் நடைபெற்று வரும் NAFTA பேச்சுக்களில் அமெரிக்காவுக்கு சாதகமாக உடன்பாடுகள் எட்டப்பட்டால், உலோகப் பொருள் வரிவிதிப்பில் தளர்வினை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கான வரியை அதிகரித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை அடுத்து, கனடா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் தங்களின் கண்டனங்களை வெளியிட்டள்ளன.
அமெரிக்காவுக்கு உருக்கு மற்றும் அலுமினியத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கனடாவே முதன்மை நிலை வகித்துவரும் நிலையில், கனடாவுக்கு நிச்சயம் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையை கனடா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இதில் கனடாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவுக்குள் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே NAFTA பேச்சுக்களில் அமெரிக்காவுக்கு சாதகமாக உடன்பாடுகள் எட்டப்பட்டால், இந்த உலோகப் பொருள் வரிவிதிப்பில் தளர்வினை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
NAFTA எனப்படும், கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்க இடையேயான வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்கள் தொடரப்பட்டு வரும் நிலையில், தமது கீச்சக பக்கதபதிவிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.