வடமாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.
வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வடக்கிற்கான தனது பயணத்தின் போது, மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கீச்சகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.