ரொரன்ரோவில் இருந்து புறப்பட்டு வோசிங்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த எயர் கனடா பயணிகள் வானூர்தி ஒன்றின் விமானக் கட்டுப்பாட்டு அறையினுள் புகை வெளியேறுவது அவதானிக்கப்பட்டதனை அடுத்து, குறித்த அந்த வானூர்தி அவசர தரையிறக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
நேற்று மாலை 4.51க்கு பியர்சன் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இருநு்து புறப்பட்டுச் சென்ற விமானமே, டலெஸ்(Dulles) அனைத்துலக வானூர்தி நிலையத்தில் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த அந்த வானூர்தி புறபட்டு பறந்துகொண்டிருந்த வேளையில், விமானியின் அறைக்குள் புகை வருவதை அவதானித்த விமானிகள், வானூர்தியை உடனடியாக தரையிறக்கும் முடிவினை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் என்ன காரணத்தினால் அவ்வாறு புகை ஏற்பட்டது என்ற விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.