“ஃபேஸ்புக்” எனப்படும் முகநூலின் பயனாளிகளாக உள்ளவர்களின் இரகசியங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பிலான பிரித்தானியாவின் விசாரணைகளில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் முன்னிலையாக மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவருக்குப் பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் முன்னிலையாகி விளக்கம் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலும் முகநூலைப் பயன்படுத்தி வருபவர்களின் தகவல்கள் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளதை அடுத்து, இதுதொடர்பாக விசாரணைகளை நடாத்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரியை முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த ஆணைக்குழுவில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் முன்னிலையாகி விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.