நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்திருந்தாலும், அது தங்களுக்கு வெற்றியே என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தம்மை காப்பாற்றிக்கொண்டார் என்ற போதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த அனைவரும் இணைந்து வாக்களித்திருந்தால், இந்தப் பெறுபேறு மாறியிருக்கும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் முயற்சி தோல்வியடைந்தமைக்கான காரணம் முழு நாட்டுக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஒரு பக்கம் இருந்தால் அந்தப் பக்கம் வெற்றி பெறும் எனவும், இந்தநிலையில் 52 பிரதிநிதிகளைக் கொண்டிருந்த தமது தரப்பு 70 என்ற அளவில் அதிகளலான வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் மஹிந்த ராதஜபக்ஷ கூறியுள்ளார்.