ஆன்மீகப் பயணமாக இந்தியா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், யாழ்ப்பாணம் திரும்பியதும் தனது அரசியல் பயணத்தை நாடி பிடித்துப் பாரப்பதற்காக இளைஞரணி மாநாடு ஒன்றை மே மாதம் முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞரணி மாநாட்டிற்கு இளைஞர்கள் பெருமளவில் திரண்டால் தனது புதிய அரசியல் நகர்வு குறித்த தகவலை அங்கு வெளியிட உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அமைக்கவுள்ள புதிய கூட்டில் இணைவதற்கு புளொட் மற்றும் ரெலோ அமைப்பின் சில பிரிவினர் ஆர்வம் காட்டிவருவதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளும் இரகசியமான முறையில் சில மாகாணசபை உறுப்பினர்கள் ஊடக நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா உள்ளிட்டவர்கள் முதலமைச்சருடன் இணைவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.