இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜெனிவா யோசனையை பிரித்தானியா மற்றும் கனடா ஊடாக அமெரிக்கா செயற்படுத்தும் என்று ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து அமெரிக்கா விலகினாலும் இலங்கை தொடர்பான ஜெனிவா யோசனை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தெரியவருகிறது.
பதவிக்காலம் முடிந்து இலங்கையில் இருந்து வெளியேறவுள்ள அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப், ஜெனிவா யோசனையை செயற்படுத்த, அமெரிக்கா இலங்கைக்கு உதவியளிக்கும் என்று கூறியுள்ளார்.
ஜெனிவா யோசனை குறித்து நேற்று கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி, அமெரிக்காவின் கண்காணிப்பாளராக தாம் செயற்பட உள்ளதாகவும் அதற்கு அமைய இலங்கை தொடர்பான யோசனை வழிநடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே ஜெனிவா யோசனையில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து்ளளார்.