ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 38வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், அதன் உபக்குழு கூட்டங்களில் இலங்கை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி நேற்று ஆபிரிக்க, பூகோள சுகாதார, பூகோள மனித உரிமைகள் மற்றும் அமெரிக்க வெளிவிவகார விடயங்களுக்கான அனைத்துலக ஒழுங்கமைப்புகள் ஆகிய உபக்குழுகள் முன்னிலையில், இலங்கையின் மனித உரிமைகள் விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது.
இதன்போது இலங்கையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புடைமை நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அறிக்கையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகள் இன்றும் நிறைவேற்றப்படாதுள்ளமை, அவற்றை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அக்கறைக் கொள்ளாதிருக்கின்றமை போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் வகையில், அமெரிக்காவும் ஏனைய பொறுப்புடைய நாடுகளுக்கும் சொற்கள் மூலமும், பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.