இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது போருக்குப் பிந்திய சூழலில் சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் கனேடியத் தூதுவருடன், இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, சிறிலங்கா இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.