ஒன்ராறியோவின் புதிய முதல்வராக டக் ஃபோர்ட் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொளளவுள்ள நிலையி்ல், இந்தப் பதவியேற்பு நிகழ்வுக்கு பொதுமக்கள் அனைவரையும் வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி மாநில அரசினை அமைப்பது மற்றும் புதிய முதல்வர் பதவியோற்பு ஆகிய நிகழ்வுகள் Queen’s Parkஇல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளன.
மாநிலத்திற்கான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ள போதிலும், அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் எத்தனை பேர் இடம்பெறவுளள்னர் என்பது குறித்தோ, யார் யாருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்பது தொடர்பிலோ கட்சித் தலைவர் டக் ஃபோர்ட்டினால் இதுவரை தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
எனினும் சுற்றுச் சூழல் பாதுகாப்பினை மையப்படுத்தி, நச்சுவாயு வெளியேற்றக் கட்டுப்பாடு தொடர்பில் முன்னைய லிபரல் அரசினால் ஏற்படுத்தப்பட்ட கட்டணத் திட்டத்தினை அகற்றுதல் உள்ளிட்ட தமது அரசாங்கத்தின் சில திடடங்களை அவர் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், தமது சட்டசபை அமைக்கப்பட்டதும் முதல் பணியாக அவற்றைச் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.