வியட்நாம் நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காணமல் போகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிக் காணமால் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவினால் வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பல கிராமங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.