ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி, மனித உரிமை செயற்பாட்டாளர் சந்தியா எக்னலிகொடவிற்கு உயிரச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
ஏலவே அவருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்தமைக்காக, பொதுபலசேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, ஆறு மாத காலத்தில் கழியும் வகையில் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு கடந்த சில நாட்களாக உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உரிய அதிகாரிகள் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று அனைத்துலக மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.