இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அவரின் இந்தப் பயணத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்துவும் இணைந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி குறித்து நேரில் ஆராயவுள்ளனர்.
இந்தியாவின் உதவியுடன் பலாலி வானூர்தி நிலையம் பிராந்திய வானூர்தி நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அலரிமாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறப்பு கூட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது.
வானூர்தி நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான காணி தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.