இன்று காலை பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதுடன், அந்தச் சம்பவத்தின அடுத்து கார் கடத்தல் சம்பவம் ஒன்றும், பேருந்து கடத்தல் முயற்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
McLaughlin வீதி மற்றும் Steeles Avenue பகுதியில், மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், அதனைத் தொடர்ந்தே இந்த கடத்தல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
முதற்கட்டமாக குறித்த இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த விபத்துடன் தொடர்புடைய ஒருவர், கார் ஒன்றைக் கடத்திக் கொண்டு அந்த இடத்திலிருந்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவ்வாறு தப்பிச் சென்ற அந்த வாகனனும் குறித்த இநத் விபத்துடன் தொடர்புடையதா என்ற விபரங்க்ள் எவையும் வெளியிடப்படவிலலை.
இதேவேளை கடத்திச் செல்லப்பட்ட அந்த வாகனம் 20 நிமிடங்களின் பின்னர் ரொரன்ரோவின் Kipling Avenue மற்றும் Steeles Avenue பகுதியில் பாதசாரி ஒருவரை மோதியதாகவும், மோதுண்ட பாதசாரி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த இடத்திலும் நிற்காது தொடர்ந்து சென்ற அந்த வாகனம், சிறிது நேரத்தின் பின்னர் Weston வீதி மற்றும் Steeles Avenue பகுதியில் மேலும் சில வாகனங்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அந்த வாகதன்தில் இருந்து வெளியேறிய நபர், அங்கிருந்த ரொரன்ரோ போக்குவரத்துக் கழக பேரூந்து ஒன்றினை கடத்திச் செல்ல முயன்றதாகவும், எனினும் இதன்போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்களின் போது காயங்களுக்கு உள்ளான அந்த சந்தேக நபர், ரொரன்ரோ காவல்துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்து்ளளனர்.